இஸ்ரேலை கண்டித்து நெல்லையில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

இஸ்ரேலை கண்டித்து நெல்லையில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆலிம்களின் தேசிய இயக்கமான ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக பாலஸ்தீன் மீது தொடர் தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 25.11.2012 ஞாயிறு மாலை 5.00 மணியளவில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் சந்தை முக்கில் நடைபெற்றது.இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலை சார்ந்த மௌலவி.சாகுல் ஹமீது உஸ்மானி தலைமை தாங்கினார் . மௌலவி.செய்யது அலி மஸ்லஹி கண்டன உரையாற்றினார் . அவர் தனது உரையில் ” பாலஸ்தீன் மீதும் அங்குள்ள குழந்தைகள் , மருத்துவமனைகள் மீதும் தொடர் தாக்குதல் நடத்திய இஸ்ரேலை வன்மையாக கண்டித்தார் . மேலும் இந்தியா இஸ்ரேல் மற்றும் அதற்கு துணை நிற்கும் அமேரிக்கா உடனான அனைத்து ராஜிய உறவுகளையும் முறிக்க வேண்டும் , ஐ.நா.சபை இஸ்ரேல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்றும் வலியுறுத்தினார் .

இறுதியாக ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில செயற்குழு உறுப்பினர் மௌலவி.முஸ்தபா ஜாபர் அலி மஸ்லஹி நன்றியுரையாற்றினார் . இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆலிம்கள் , குழந்தைகள் உட்பட 200க்கும் மேற்பட்டவர் கள் கலந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிரான தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.